என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கள்ளநோட்டு ரூபாய்"
திருச்சி:
திருச்சி கே.கே.நகர் தென்றல் நகரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரே பைக்கில் 3 வாலிபர்கள் வந்தனர். சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் இருந்த பையை போலீசார் ஆய்வு செய்தனர்.
அந்த பையினுள் கத்தை கத்தையாக புதிய 2 ஆயிரம், 500 ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. அதனை தொடர்ந்து அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணையில் அவர்கள், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்த பாட்ஷா (36), தஞ்சை பட்டுக்கோட்டையை சேர்ந்த ராஜா சபரீஷ் (26) மற்றும் திருச்சி காஜாமலை காஜா மியான் கோவில் தெருவை சேர்ந்த கனகராஜ் (34) என்பதும் தெரியவந்தது.
பின்னர் அவர்கள் கள்ள நோட்டுக்களை எங்கு வைத்து அச்சடித்தனர்? இதில் வேறு யாரேனும் தொடர்பட்டுள்ளனரா? என விசாரணை நடத்தினர். அப்போது பாட்ஷா கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கே.கே.நகர் எல்.ஐ.சி. காலனியில் உள்ள வீட்டினை வாடகைக்கு எடுத்து யாருக்கும் சந்தேகம் ஏற்படாமல் இருக்க தனது குடும்பத்தினருடன் வந்து தங்கியதும் தெரியவந்தது.
மேலும் அவர்களை கள்ளநோட்டு அச்சடிக்க பயன்படுத்திய வீட்டிற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது வீட்டினுள் கூட்டாளிகள் உதவியுடன் கலர் ஜெராக்ஸ் எந்திரத்தை பயன்படுத்தி ரூ.500, 2000 நோட்டுக்களை அச்சடித்து, அதனை குறிப்பிட்ட அளவு வெட்டி எடுக்க தேவையான உபகரணங்கள் இருந்தது. இவர்கள் ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் கும்பல் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கிடையே போலீஸ் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் திருச்சி கே. சாத்தனூரை சேர்ந்த சதீஸ் குமார் (21) ஆங்கு வந்தார். இதனால் அவருக்கும் இதில் தொடர்வு உள்ளதா? என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. தொடர்ந்து அவரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கள்ளநோட்டு அச்சடிக்க பயன்படுத்திய ஜெராக்ஸ் எந்திரம், அவற்றை வெட்டி எடுக்கும் கட்டிங் மெசின் ஆகியவை மற்றும் 586 எண்ணிக்கையில் ரூ.2 ஆயிரம் நோட்டுகள், 478 எண்ணிக்கையில் ரூ.500 நோட்டுக்கள் என மொத்தம் ரூ.14 லட்சத்து 11 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் அவர்கள் பயன்படுத்திய செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அதில் கள்ளநோட்டு பரிமாற்றும் கும்பல்களின் தொடர்பு எண்கள் இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. கள்ளநோட்டுக்களை எளிதில் பரிமாற்றும் வகையில் வங்கியின் அடையாள ஸ்டிக்கர்களும் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் பாட்ஷா, ராஜா சபரீஷ் மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த கனகராஜ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சதீஸ்குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர்கள் பல்வேறு பகுதிகளில் உள்ள கள்ளநோட்டு பரிமாற்றும் கும்பல்கள் இவற்றினை புரோக்கர்கள் மூலமாக புழக்கத்தில் விட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
திருச்சியில் கள்ளநோட்டு கும்பல் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை:
2016-ம் ஆண்டு பழைய ரூ.1000, ரூ.500 நோட்டுகளை ஒழித்து புதிதாக ரூ.2000, ரூ.500 நோட்டுக்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
இந்த புதிய ரூபாய் நோட்டுகளை யாரும் கள்ள நோட்டுகளாக தயாரிக்க முடியாதபடி அதில் ரகசிய குறியீடுகளும், விசேஷமாக தயாரிக்கப்பட்ட பேப்பர்களும் பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் அதையும் மீறி புதிய ரூபாய் நோட்டுகளையே பயன்படுத்தி கள்ள நோட்டுகள் தயாரிக்கப்படுவதை போலீசார் அவ்வப்போது கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
சமீபத்தில் கோவையை அடுத்த பேரூரைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கடையில் ரூ.500 கள்ள நோட்டு கொடுத்து சிகரெட் வாங்கிய போது பிடிபட்டார். இந்த நோட்டுக்கள் சிவகாசியில் அச்சடிக்கப்பட்டதாக தெரிவித்தார். இதையடுத்து கேரளா- தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் கொண்ட கள்ள நோட்டு கும்பல் சிக்கியது. அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டு சிக்கியது.
நேற்று மாலை சென்னையிலும் கள்ள நோட்டுகள் தயாரித்து மாற்ற முயன்ற 2 பெண்கள் போலீசில் சிக்கியுள்ளனர். சென்னை அமைந்தகரையில் மேத்தா நகர் ரெயில்வே காலனி 3-வது தெருவில் கன்னிமரியாள் என்பவர் மருந்துக் கடை நடத்தி வருகிறார்.
நேற்று மாலை 6 மணி அளவில் ஒரு பெண் இரு சக்கர வாகனத்தில் அவரது கடைக்கு வந்து மருந்து வாங்கினார். அதற்கு ரூ.2000 பணம் கொடுத்தார்.
அந்த நோட்டை வாங்கிய கன்னிமரியாளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. ரூபாய் நோட்டு தாள் போல் இல்லாமல் சாதாரண தாள் போல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த மருந்து கடை ஊழியர்கள் அருகில் இருந்தவர்கள் துணையுடன் அந்தப் பெண்ணை மடக்கிப் பிடித்தனர்.
உடனடியாக அமைந்தகரை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் முருகன் அந்தப் பெண்ணை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினார். அப்போது அவர் வைத்திருந்தது கள்ள நோட்டு என்பதை ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து போலீசார் அந்தப் பெண்ணை கைது செய்தனர். அவரது பெயர் வனிதா (30) சைதாப்பேட்டை யைச் சேர்ந்தவர் என தெரிய வந்தது.
இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. வடசென்னை கூடுதல் கமிஷனர் தினகரன் மேற்பார்வையில் அண்ணா நகர் துணை கமிஷனர் சுதாகர், உதவி கமிஷனர் குணசேகரன் ஆகியோர் பிடிபட்ட வனிதாவிடம் கள்ள நோட்டு எங்கு, எப்படி கிடைத்தது? யார் அச்சடித்தது என்பது பற்றி விசாரணை நடத்தினார்கள்.
முதலில் வனிதா தனக்கு எதுவும் தெரியாது, கொளத்தூரில் ஒருவர் கொடுத்தார் என்றும், லோகேஷ் என்பவர் கொடுத்தார் என்றும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். இதனால் பெண் போலீஸ் உதவியுடன் வனிதாவை தனியாக வைத்து விசாரித்தனர்.
அப்போது கொளத்தூரைச் சேர்ந்த சத்தியவதி என்ற பெண்ணின் பெயரை தெரிவித்தார். அவரது வீட்டில் கள்ள நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எந்திரத்தை பயன் படுத்தி தயாரித்ததாக போலீசாரிடம் கூறினார்.
இதையடுத்து கொளத்தூரில் உள்ள சத்தியவதி வீட்டுக்கு போலீஸ் படை விரைந்து சென்று சோதனையிட்டது. அங்கு கள்ள நோட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட ஜெராக்ஸ் எந்திரம் இருந்தது. கள்ள நோட்டுகளும் சிதறிக்கிடந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றினர்.
அங்கு புழக்கத்தில் விடுவதற்காக வைத்திருந்த ரூ.36 ஆயிரம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ரூ.17 ஆயிரம் மதிப்புள்ள 2000 ரூபாய் கள்ள நோட்டுகளும், மீதி 500 ரூபாய் கள்ள நோட்டுகளும் ஆகும்.
ஒரிஜினல் 2000 ரூபாயை பிரதி எடுத்து அதை வைத்து பல பிரதிகளாக கள்ள நோட்டு தயாரித்துள்ளனர். நல்ல நோட்டுகளை மட்டும் வைத்துக் கொண்டு சரியாக பிரிண்ட் ஆகாத கள்ள நோட்டுகளை வீட்டிலேயே ஆங்காங்கே வீசி இருந்தனர்.
இது தொடர்பாக சத்தியவதியிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். இரு பெண்களையும் நேருக்கு நேர் ஒரே இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கள்ள நோட்டு தயாரிப்பில் இவர்கள் மட்டும்தான் ஈடுபட்டனரா? இவர்களுக்கு பின்னால் கும்பல் எதுவும் செயல்படுகிறதா? என்று விசாரணை நடக்கிறது.
ரூ.2000 கள்ள நோட்டு சிக்கியதைத் தொடர்ந்து கடைக்காரர்களுக்கும், பொது மக்களுக்கும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டு நடமாட்டம் பற்றி தெரியவந்தால் உடனே போலீசுக்கு தெரிவிக்கு மாறும் எச்சரிக்கையுடன் கவனித்து வாங்குமாறும் தெரிவித்துள்ளனர். #FakeCurrency #arrest
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்